தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் பயிர் சேதங்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
உள்துறை இணை செயலர் திரு அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான இக்குழுவினர், இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு குழு, நம்பிவயல், திப்பியகுடி, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய வட்டங்களில் பல்வேறு இடங்களில் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பயிர் சேதம் மற்றும் வெள்ளப் பாதிப்புகளை மற்றொரு குழுவினர் பார்வையிட்டனர்.
மாவட்டத்தில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு விஷ்ணு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் களமாவூர், ஆவனக்கோட்டை பகுதிகளில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு சேதடைந்த நெற்பயிர்களை மற்றொரு குழு ஆய்வு செய்தது.
தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய குழுவினர் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளனர் என்று அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
  • Website Designing