தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது, திமுக உறுப்பினர் திருமதி. தமிழரசி பேசியபோது, குறுக்கிட்டப் பேசிய முதலமைச்சர் நடப்புக் கூட்டத் தொடரில் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றும் மரபு இல்லை என்பதால், பட்ஜெட், கூட்டத் தொடரின்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

இதேபோன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அப்போது குறிப்பிட்டார்.

सोशल मीडिया पर अपडेट्स के लिए Facebook (https://www.facebook.com/industrialpunch) एवं Twitter (https://twitter.com/IndustrialPunchपर Follow करें …

  • Website Designing