இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தியாவில் கடல் விமான சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் கடல் விமான சேவை வெகு விரைவில் சாத்தியமாகும். இந்திய அரசின் ஆர்சிஎஸ்-உடான் திட்டத்தின் கிழ் இந்திய எல்லைக்குள் கடல் விமான சேவைகள் தொடங்கப்படும்.

பல்வேறு இடங்களில் இச்சேவைகளை குறித்த நேரத்தில் தொடங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரிகளை கொண்ட ஒத்துழைப்பு குழு ஒன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படும். அனைத்து முகமைகளாலும் அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, இரு அமைச்சகங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புதிய நீர் விமான நிலையங்கள் உருவாகும் என்றும், இந்தியாவில் புதிய கடல் விமான வழித்தடங்கள் ஏற்படும் என்றும் கூறினார்.

இந்திய கடல்சார் மற்றும் விமான போக்குவரத்து துறைகளுக்கு திருப்புமுனையாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும் என்றும், கடன் விமானங்கள் மூலம் சுற்றுச்சுழலுக்கு உகந்த போக்குவரத்தை இது ஊக்கப்படுத்துவதால் நாடு முழுவதும் தடையில்லா போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

सोशल मीडिया पर अपडेट्स के लिए Facebook (https://www.facebook.com/industrialpunch) एवं Twitter (https://twitter.com/IndustrialPunchपर Follow करें …

  • Website Designing