இந்தியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு ஒப்புதலையும், அனுமதியையும் அளிப்பதற்கான ஒற்றைச் சாளர தளத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் இன்று தொடங்கியுள்ளது.‌ இந்தியாவின் முதல் வணிகரீதியான நிலக்கரி சுரங்க ஏலத்தில் வெற்றி பெற்றவர்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இந்தத் தளத்தைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, 5 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்தும் இலக்கில் நிலக்கரித் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார். நிலக்கரித் துறையில் இருந்த வந்த பிரச்சினைகளைக் களையவும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் நீண்ட நாட்களாக தேவை இருந்ததாகவும், திரு மோடியின் ஆட்சிக் காலத்தில் அவை நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

நாட்டின் முதல் வணிகரீதியான நிலக்கரி சுரங்க ஏலத்தின் மூலம் 19 பேருக்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதன் மூலம் மாநிலங்களுக்கு வருடத்திற்கு ரூ. 6,500 கோடி வருவாய் கிடைப்பதுடன் 70,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வணிகரீதியான சுரங்க ஏலத்தின் அடுத்த பகுதி ஜனவரி 2021-ல் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் திரு ஜோஷி அறிவித்தார்.‌ “நாம் நிலக்கரியில் சீர்திருத்தங்களை அமல்படுத்தி உள்ளோம், தற்போது நிலக்கரி நாட்டை மாற்றியமைக்கும்” என்று அவர் தெரிவித்தார். “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்பதை நோக்கமாகக் கொண்டு ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கான ஒற்றை சாளர தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலக்கரி துறையில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இது அடித்தளமாக அமையும்”, என்று அவர் கூறினார்.

  • Website Designing